TAMIL
இலங்கை வந்துள்ள இங்கிலாந்து நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு கொரோனாவா? கிரிக்கெட் வாரியம் விளக்கம்

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு கொரோனா பாதிப்பா என கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் எதிர்வரும் 19ம் திகதி தொடங்குகிறது.
முன்னதாக மார்ச் 7ம் திகதி மற்றும் 12ம் திகதி இலங்கை கிரிக்கெட் லெவன் அணியுடன் இங்கிலாந்து மோதிய இரண்டு பயிற்சி டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்தது.
வயிற்று பிரச்சியை காரணமாக இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகினார். அவருக்கு பதிலாக மாட் பார்கின்சன் அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்று மைதானத்தில் விளையாட மாட்டார் மற்றும் அவருக்கு வயிற்று பிரச்சினை உள்ளது.
அவர் ஹோட்டலில் தங்குவார். இது வைரஸ் பிரச்சினை அல்ல அல்லது கொவிட்-19 தொடர்புடைய பிரச்சினையும் அல்ல என தெளிவுப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக இலங்கை-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.