CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இந்திய வீரர்கள் காயம், ஆஸ்திரேலியா அணிக்கு வாய்ப்பு: ரிக்கி பாண்டிங்
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியிலேயே இருந்து இந்திய அணிக்கு, வீரர்கள் காயம் அடைவது பெரும் தலைவலியாக உள்ளது.
முதல் டெஸ்டில் முகமது ஷமி காயத்தால் வெளியேறினார். 2-வது டெஸ்டில் உமேஷ் யாதவ் காயத்தால் வெளியேறினார். 3-வது டெஸ்டில் ஜடேஜா, ஹனுமா விஹாரி வெளியேறியுள்ளனர். பயிற்சியின்போது கேஎல் ராகுல் காயம் அடைந்துள்ளார்.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இன்றுடன் முடிவடைந்த சிட்னி டெஸ்ட் டிரா ஆனது. கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
பிரிஸ்பேன் மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ராசியானது. இங்கு தோல்வியை சந்தித்தது கிடையாது. 15-ந்தேதி தொடங்க இருக்கும் பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் வாய்ப்பு என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கான வாய்ப்பு சற்று கூடுதலாக உள்ளது. முதலாவது பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் சாதனை. 2-வது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ள வில் புகோவ்ஸ்கி குணமடைந்துவிட்டால், ஆஸ்திரேலியா மாற்றம் ஏதும் இல்லாமல் செல்லும். புகோவ்ஸ்கி குணமடையவில்லை என்றால், ஒரேயொரு மாற்றம் செய்வார்கள். இந்த போட்டியில் மிகவும் சிறந்த வகையில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
இந்திய அணியில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்குப்பதில் மாற்று வீரர்களை இந்தியா களம் இறக்க வேண்டும். அவர்கள் இன்னொரு பேட்ஸ்மேன் உடன் விளையாடினால், அவர் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வார். பண்ட் 6-வது இடத்தில் களம் இறங்குவார். சாஹா 7-வது இடத்தில் களம் இறங்குவார். என்னை பொறுத்தவரையில் இது சிறப்பாக இருக்கும்’’ என்றார்.
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா 33 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 13 போட்டிகளை டிரா செய்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 8-ல் தோல்வியடைந்துள்ளது.