TAMIL
இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கு திருமணம் முடிந்தது! மணப்பெண் யார் தெரியுமா? வெளியான புகைப்படங்கள்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் கருண் நாயர் தனது நீண்ட நாள் தோழி சனயா டங்கரிவாலாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் கருண் நாயரின் திருமணம் மற்றும் வரவேற்பில் பிரபல வீரர்கள் ஸ்ரேயாஸ்
ஐயர், வருண் ஆரோன், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர் மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடக அணிக்காக விளையாடிவரும் கருண் நாயர், கடந்த 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போட்டியில் 303 ரன்களை அடித்து முச்சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.
கடந்த ஆண்டில் நிச்சயம் தன்னுடைய நீண்ட நாள் காதலி சனயா டங்கரிவாலா, தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டு தங்களுக்குள் நிச்சயமானதை கடந்த ஜூன் மாதத்தில் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருண் நாயர் பகிர்ந்தார்.
இந்நிலையில் உதய்பூரில் கருண் நாயரின் திருமணம் அவரது உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சக வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், வருண் ஆரோன், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர் மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்றோர் பங்கேற்றனர்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்