TAMIL
இந்திய ஒரு நாள் அணியிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டார் தவான்.. இளம் வீரருக்கு வாய்ப்பு
மும்பையில் டிசம்பர் 15ம் திகதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டிராபியின் போது முழங்கால் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரிலிருந்து தவான் வெளியேற்றப்பட்டார்.
டி-20 தொடரில்ஷிகர் தவானுக்கு பதிலாக கேரள விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இடம்பெற்றார்.
இந்த ஆண்டு தவான் காயம் காரணமாக ஓரங்கட்டப்படுவது இது முதல் முறை அல்ல. 2019 உலகக் கோப்பையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சதத்தின் போது தவான் கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து விலகினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பரபரப்பான ஆண்டைக் கொண்ட மாயங்க் அகர்வால், தனது முதல் சர்வதே ஒரு நாள் போட்டியில் களமிறங்குவார் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சங்கருக்கு மாற்றாக உலகக் கோப்பை அணியின் ஒரு பகுதியாக இருந்த அகர்வாலுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவுஸ்திரேலியாவில் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 76, 42 மற்றும் 77 ஓட்டங்களுடன் ஒரு அற்புதமான தொடக்கத்திற்குப் பிறகு, அகர்வால் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2 டெஸ்ட் தொடர்களில் மோசமான தொடரைக் கொண்டிருந்தார்.
ஆனால், சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி பாராட்டை பெற்றார்.
மாயங்க் அகர்வால் இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் ஒரு சதத்தை அடித்தார் மற்றும் ரோகித் சர்மாவுடன் வலுவான தொடக்க கூட்டணியை உருவாக்கினார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவின் தொடக்க ஆட்டகாரராக மாயங்க் அகர்வால் அல்லது கே.எல்.ராகுல் இருவரில் யாரை இந்தியா தெரிவு செய்யபோகிறது என்பதை பார்க்க வேண்டும்.