TAMIL
இந்தியா-இலங்கை 20 ஓவர் போட்டிக்கு ரூ.500 விலையில் டிக்கெட் விற்பனை
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த ஆட்டங்கள் முறையே கவுகாத்தி (ஜன.5), இந்தூர் (ஜன.7), புனே (ஜன.10) ஆகிய நகரங்களில நடைபெறுகிறது.
இதில் 27 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது 20 ஓவர் போட்டிக்கான டிக்கெட் கட்டண விவரத்தை மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது.
இந்த ஆட்டத்திற்கான குறைந்த பட்ச டிக்கெட் ரூ.500-க்கும், அதிகபட்சமாக ரூ.4,920-க்கும் விற்கப்பட உள்ளது. ஆன்லைன் டிக்கெட் விற்பனை 6-ந்தேதி தொடங்கும்.