TAMIL

இந்தியா-ஆஸ்திரேலியா இறுதி ஒருநாள் போட்டி: ரோகித் சர்மா புதிய மைல்கல்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி
ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286
ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, 287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.



இந்த இன்னிங்ஸின் இரண்டாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9000 ரன்கள் என்ற
மைல்கல்லை எட்டினார்.

இதன்மூலம் குறைந்த இன்னிங்ஸில் 9000 ரன்களை எட்டிய வீரர்கள் வரிசையில் கங்குலியைப் பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா 3வது
இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

குறைந்த இன்னிங்ஸில் 9000 ரன்களை எட்டிய வீரர்கள் விவரம் வருமாறு;-

* விராட் கோலி – 194 இன்னிங்ஸ்

* ஏபி டி வில்லியர்ஸ் – 205 இன்னிங்ஸ்

* ரோஹித் சர்மா – 217 இன்னிங்ஸ்

* சௌரவ் கங்குலி – 228 இன்னிங்ஸ்

* சச்சின் டெண்டுல்கர் – 235 இன்னிங்ஸ்


Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker