TAMIL
இந்தியாவை வீழ்த்த… ஒரே வழி இது தான்! வெளிப்படையாக கூறிய பெரேரா
டி-20 தொடரில் இந்தியாவை வீழ்த்த இலங்கை அணியின் மூத்த வீரர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இலங்கை விக்கெட் கீப்பர்-துடுப்பாட்டகாரர் குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி-20 ஞாயிற்றுக்கிழமை இரவு கவுகாத்தில் கைவிடப்பட்டதை அடுத்து பேட்டியளித்த பெரேரா கூறியதாவது,
நான் நிலையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை, ஆனால், டி-20 கிரிக்கெட்டில் சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்த தொடரில் விளையாடினேன்.
அங்கு நான் நன்றாக விளையாடினேன், ஆனால், சதம் அடிக்க முடியவில்லை. எனவே இந்த தொடரில் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பேன்.
நாங்கள் ஒரு அணியாக ஒன்றாக ஒற்றுமையாக விளையாட வேண்டும். வெளிப்படையாக மூத்த வீரர்கள் கூடுதல் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மிகச் சிறப்பாக விளையாட வேண்டும்.
அதே நேரத்தில் நல்ல விஷயம் என்னவென்றால், இலங்கை அணியில் சில இளம் பந்து வீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்டகாரர்கள் உள்ளனர்.
இந்தியா மிகச் சிறந்த அணி. உலக கிரிக்கெட்டில், இந்தியா தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. எனவே, ஒரு அணியாக நடு வரிசையில் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய முயற்சிப்போம் என்று கூறினார்.
தானும் ஒரு மூத்த வீரர் என்பதால், எனக்கும் கூடுதல் பொறுப்புடன் விளையாடி வேண்டி கட்டாயம் இருக்கிறது.
நான் பொறுப்புடன் விளையாட வேண்டியிருப்பதால் இந்தத் தொடர் எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். நான் மூன்றாம் இடத்தில் துடுப்பாடுவேன், மேலும் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பேன் என்று குசல் பெரேரா கூறினார்.