CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
இந்தியாவை ஆஸ்திரேலியா மிகவும் எளிதாக வீழ்த்தும்: இதற்கான காரணத்தை கூறும் வாகன்
இந்திய டெஸ்ட் அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி டிசம்பர் 17-ந்தேதி தொடங்குகிறது.
இந்த முறை ஆஸ்திரேலியா எளிதாக இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்லும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் விராட் கோலி மூன்று போட்டிகளில் விளையாடாதது என்பதுதான் என விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து வாகன் தனது டுவிட்டர் பக்க்தில் ‘‘விராட் கோலி ஆஸ்திரேலியாவில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. முதல் குழந்தை பிறக்க இருப்பதால் அவரது முடிவு சரியானது. ஆனால், இதற்கான அர்த்தம் ஆஸ்திரேலியா மிகவும் எளிதாக தொடரை வெல்லும்’’ என்றார்.