TAMIL
இது போதும்… கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்! மலிங்காவின் நெகிழ வைக்கும் ஆசை
இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றால் போதும் நான் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெற்றுவிடுவேன் என லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
நேற்று கவுகாத்தில் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட மலிங்கா தனது ஓய்வு குறித்து கூறியதாவது, நான் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.
இப்போது இலங்கை கிரிக்கெட்டுக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
அவர்கள் இப்போது நான் விளையாடியது போதும் என்று சொன்னால், டி 20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
எனது ஒரே இலக்கு டி 20 உலகக் கோப்பையில் தகுதிச் சுற்றில் விளையாடுவதுதான். இலங்கை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றால்,
அதற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவதை ஒருபோதும் பொருட்படுத்த மாட்டேன் என்று மலிங்கா கூறினார்.
டி -20 சர்வதேச போட்டிகளில் 100 அணித்தலைவராக செயல்பட்ட ஒரே பந்து வீச்சாளரான மலிங்கா மார்ச் மாதத்தில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்ட டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறலாம் என்று கூறியிருந்தார்,
ஆனால் பின்னர் மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாட விருப்பம் தெரிவித்தார் என்பது நினைவுக்கூரத்த்ககது.