TAMIL
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்:நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விளையாடவில்லை

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் வருகிற 1-ந் தேதி நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், காயம் காரணமாக கேப்டன் கனே வில்லியம்சன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக டிம் சவுதி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.