பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்று ஜிம்பாப்வே- பாகிஸ்தானுக்கு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் பாபர் அசாம் 52 ரன்கள் விளாசினார். அவர் 17 ரன்கள் அடித்தபோது 2000 ரன்களை தொட்டார். இது அவருக்கு 52-வது டி20 இன்னிங்ஸ் ஆகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீர்ர என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன் விராட் கோலி 56 இன்னிங்சில் 2000 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது பாபர் அசாம் அதை முறியடித்துள்ளார். ஆரோன் பிஞ்ச் 62 இன்னிங்சிலும், பிரெண்டன் மெக்கல்லம் 66 இன்னிங்சிலும், மார்ட்டின் கப்தில் 68 இன்னிங்சிலும் 2000 ரன்களை கடந்துள்ளனர்.