TAMIL
விமான நிலையத்தில் இலங்கை ஜாம்பவான் முரளிதரன் செய்த செயல்..! மக்களின் மனதை வென்ற சம்பவம்
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் உலகின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரருமான முத்தையா முரளிதரன் வியாழக்கிழமை அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செய்த செயல் மக்களின் மனதை வென்றுள்ளது.
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முரளிதரனும் அவரது குடும்பத்தினரும் விமான நிலையத்தில் குடியேற்றத்தில் கவுண்டருக்குச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காத்திருக்கும் போது, அனுமதி கேட்ட அனைவருடனும் புகைப்படம் எடுத்துள்ளனர். விரைவாக செல்ல குடிவரவு ஊழியர்கள் அவரை வரிசையிலிருந்து வெளியேறும் படி கேட்டுக்கொண்டனர்.
ஆனால் ஊழியர்களின் சலுகையை பணிவுடன் மறுத்த முரளிதரன், மற்ற மக்களுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து வீடு திரும்பியுள்ளார்.
சம்பவம் குறித்து பேசிய முரளிதரன் மனைவி மதி மலார், இந்தியாவில் இருந்த நாங்கள் வந்த எங்கள் விமானம் இரவில் தரையிறங்கியது.
நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் இருந்தோம். விமான நிலையத்தில் இரவு நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது. குடியேற்றத்தில் நிறைய பேர் இருந்தனர்.
இலங்கையில் உள்ள மக்கள் முரளியை நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள், மரியாதைக்குரிய அடையாளமாக எங்களை முன்னே செல்லும் படி கூறினர், குடிவரவு அதிகாரியும் கூட வரிசையை விட்டு வெளியேறி நேராக செல்லும் படி கோரினார்.
நாங்கள் எங்கள் மக்களை நேசிக்கிறோம், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதால் நாங்கள் வரிசையை விட்டு வெளியேறி நேராக செல்ல விரும்பவில்லை என்று கூறினார்.
முரளிதரனின் இச்செயல் இலங்கை மக்களின் மனதை மட்டுமின்றி அனைவரின் மனதையும் வென்றுள்ளது.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்