TAMIL

வங்கதேச கிரிக்கெட் வீரரின் திருமணத்தில் நடந்த மோசமான சம்பவம்! தாக்கப்பட்ட உறவினர்கள்

வங்கதேச கிரிக்கெட் வீரரான சவுமியா சர்க்கரின் திருமண விழாவின் போது, சண்டை ஏற்பட்டதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான Soumya Sarkar கடந்த புதன் கிழமை Prionti Debnath Puja என்ற 19 வயது பெண்ணை கரம்
பிடித்து தன்னுடைய வாழ்க்கையில் புதிய இன்னிங்ஸ் ஒன்றை துவங்கினார்.



இவர்களின் திருமணம் அங்கிருக்கும் Khulna Club-ல் நடைபெற்றுள்ளது.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இந்த திருமண விழாவின் போது, திடீரென்று திருமணத்திற்கு வந்திருந்த சிலரின் மொபைல் போன்கள் திருடப்பட்டது.

சுமார் 7 மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ளது. அதில் ஒன்று Soumya Sarkar-ன் தந்தை செல்போன்று கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்த நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிபட, உடனே அவர்கள் திருமணத்திற்கு வந்த உறவினர்களை தாக்கியதால், பெரிய சண்டை ஏற்பட்டது.

கிரிக்கெட் வீரரின் திருமணம் என்பதால் ஊடக நபர்கள் அங்கு வந்திருந்ததால், அவர்கள் உடனடியாக இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.



இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மொபைல் போன்களை மீட்டு கொடுத்துள்ளனர். அந்த நபர்கள் கைது செய்யப்பட்டார்களா? இல்லையா? என்பது குறித்து தெரியவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker