TAMIL
‘லாகூரில் பனிப்பொழிவு’ குறித்து ஷோயப் அக்தரின் கருத்திற்கு சுனில் கவாஸ்கர் பதிலடி
கொரோனா வைரஸ் தடுப்புக்கான நிதியை திரட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் கிடைக்கும் பணத்தை இருநாடுகளும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இப்போது சமூக வலைத்தளத்தில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜாவுடன் நடைபெற்ற உரையாடலின் போது சுனில் கவாஸ்கரிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,
லாகூர் நகரில் பனிப்பொழிய வாய்ப்பிருக்கே தவிர, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை.
இரு அணிகளும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் மோதிக் கொண்டுதான் இருக்கிறது என தெரிவித்தார்.
இரு அணிகளுக்குமான இடையேயான ஒரு தொடர் இப்போது சாத்தியமில்லை. என கூறினார்.
இதற்கு பதிலளித்த ஷோயப் அக்தர் (சுனில் கவாஸ்கர்) கடந்தாண்டும் லாகூர் நகரில் பனி பொழிந்தது எனவே எதுவம் முடியாதது என கிடையாது என வேடிக்கையாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சுனில் கவாஸ்கர்,
முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுடன் உரையாடும்படி அழைப்புகள் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. ரமீஸ் ராஜாவுடனான இந்த உரையாடலை மிகவும் ரசித்தேன்.
ஆனால் நான் மிகவும் ரசித்தது லாகூர் பனிப்பொழிவு குறித்து என்னுடைய கருத்துக்கு அக்தர் கொடுத்த பதிலடியை தான், அது மிகவும் அற்புதம்.
முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்டவர் என்பதைக் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடருக்கான தனது பதிலடி குறித்த சுனில் கவாஸ்கர் கருத்துக்கு பலரும் பாராட்டுக்குகளை தெரிவித்து வருகின்றனர்.