TAMIL

பானி-பூரி விற்பதில் தொடங்கி.. இன்று உலகக் கோப்பையில் பட்டையை கிளப்பியது வரை! வியக்க வைக்கும் இந்திய வீரரின் பயணம்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து பட்டையை கிளப்பியதன் மூலம் கடின உழைப்புக்கு மாற்று இல்லை என்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிரூபிக்கிறார்.

இந்தியவிற்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் 2011ம் ஆண்டு 11 வயதில் மும்பைக்கு வந்த ஜெய்ஸ்வால் ஒரு கூடாரத்தில் வசித்துள்ளார், பானிபுரியை விற்றார், மேலும் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியுள்ளார்.



ஜெய்ஸ்வாலின் தந்தை உத்தரபிரதேசத்தின் படோஹியைச் சேர்ந்த கடைக்காரர்.

சிறுவன் விளையாட்டின் மீதான ஆர்வத்திற்காக மும்பைக்கு வந்தபோது, அவர் தனது மாமா சந்தோஷுடன் வாழ வேண்டியிருந்தது, ஆனால் அவர் தங்குவதற்கு அந்த வீடு பெரிதாக இல்லை.

இதனால், அவரது மாமாவின் வேண்டுகோளின் பேரில், முஸ்லீம் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப், ஜெய்ஸ்வாலை கூடாரங்களில் தங்குவதற்கு அனுமதித்தது.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு அது அவருடைய வீடாக இருந்தது. நிச்சயமாக, தன்னைத் தக்க வைத்துக் கொள்ள அவர் கடினமாக வேலைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. பானிபுரி மற்றும் பழங்களையும் விற்பது அவரது நிதிகளை நிர்வகிக்க உதவியது.

ஜுவாலா சிங் தான் முதலில் ஜெய்ஸ்வாலை அடையாளம் கண்ட அவருக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்துள்ளார். அங்கிருந்துதான் ஜெய்ஸ்வாலின் வாழ்க்கை மாறத் தொடங்கின.

ஜுலை 30 அன்று, இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி இலங்கைக்கு எதிராக விளையாடி போது, 17 வயதான ஜெய்ஸ்வால் அறிமுகமானார்.



நேற்று தென் ஆப்பரிக்காவில் நடந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதியில் பட்டையை கிளப்பினார் ஜெய்ஸ்வால். 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஜெய்ஸ்வாலின் கடின உழைப்பிற்கு பலனாக அவர் வருங்காலங்களில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker