CRICKETLATEST UPDATESNEWSTAMIL
பாக்சிங் டே டெஸ்ட் – முதல் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 65/3
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கியது.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட் ஆகியோர் களமிறங்கினர். ஜோ பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். மேத்யூ வேட் 30 ரன்னில் அஷ்வினிடம் வீழ்ந்தார்.
அடுத்து இறங்கிய லாபஸ்சாக்னே நிதானமாக ஆடினார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அஷ்வின் ஸ்டீவ் ஸ்மித்தை டக் அவுட்டாக்கினார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 38 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.
இந்தியா சார்பில் அஷ்வின் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதல் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா அணி 65 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. லாபஸ்சாக்னேவும் டிராவிஸ் ஹெட்டும் விளையாடி வருகின்றனர்.