TAMIL
பாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் போட்டி நடப்பதில் சிக்கல்
பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நாளை தொடங்கும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல்
டெஸ்ட் மழையால் பாதிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை நகரத்தில் மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது,
அதாவது டெஸ்டின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது நாள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
செப்டம்பர் மாதத்தில் கராச்சியில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் சர்வதேச போட்டி கடும் மழையால் கைவிடப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கையின் அணி பேருந்து மீதான தாக்குதலுக்குப் பின்னர், 10 ஆண்டுகளுக்கு பிறகு ராவல்பிண்டியில்
இலங்கையுடன் பாகிஸ்தான் தனது முதல் உள்ளுர் டெஸ்டில் விளையாடவுள்ளது.
அந்த தாக்குதலில் ஆறு பாதுகாப்பு வீரர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு வீரர்கள் காயமடைந்தனர்
மற்றும் அடுத்த 10 ஆண்டிற்கு பாகிஸ்தான் உள்ளுர் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
நடுநிலையான இடங்களில் தங்களது உள்ளுர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது பாகிஸ்தான்.
சமீபத்தில் அஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டில் இன்னிங்ஸ் தோல்விகளை சந்தித்து 2-0 தொடரை இழந்த பாகிஸ்தான், இந்தத் தொடரை மீண்டு ஏழும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி, புதிய தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் கீழ் விளையாடவுள்ளது.
அவர் கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றார் மற்றும் முன்னாள் பயிற்சியாளராக இருந்த பாகிஸ்தானுக்கு எதிராக தனது பதவிக் காலத்தைத் தொடங்குவார்.
இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும், இரண்டு வருட காலப்பகுதியில் முதல் ஒன்பது இடங்களில் உள்ள டெஸ்ட் நாடுகளை மோதிகொள்கிறது, அவர்களின் வெற்றியின் அடிப்படையில் புள்ளிகளைப் பெறுகிறது மற்றும் ஜூன் 2021ல்
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிவடைகிறது.