CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
பரிதாபத்திற்கு உள்ளான ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி தொடங்கியது. ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன.
தொடர் தொடங்கியதில் இருந்து மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஆர்சிபி அணிகள் ஆதிக்கம் செலுத்தின. இதில் மும்பை இந்தியன்ஸ் 9 வெற்றிகள் பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியதுடன் முதல் இடத்தை பிடித்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் 9 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று அசத்தியிருந்தது. 10-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது. அதில் இருந்து அணிக்கு கெட்ட நேரம் தொடங்கியது.

அதேபோல் ஆர்சிபி அணியும் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. முதல் 10 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்து 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதில் கொடுமையான விசயம் என்னவென்றால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்த இரண்டு அணிகளும் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.