TAMIL

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில்

சீனாவில் நடைபெற்ற உலககோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றில், 20 வயதான தமிழக வீராங்கணை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தினார்.

10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் 250.8 புள்ளிகள் பெற்று இளவேனில் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். இந்த ஆண்டு இவர் பெறும் இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும்.



இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனீரோவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் கலந்து கொண்டு 251.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker