TAMIL
தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த தவான்: ரோஹித் சர்மா வெளியிட்ட வீடியோ

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து 3-வது போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது. எனவே இப்போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் விமானம் மூலம் பெங்களூருக்கு சென்றனர். அப்போது, விமானத்தில் ஷிகர் தவான் தனக்குத்தானே பேசும் வீடியோ ஒன்றை ரோகித் சர்மா எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், “இல்லை, அவர் என்னிடம் பேசவில்லை, கற்பனை நண்பனிடம் பேசும் அளவிற்கு இவருக்கு வயதும் அதிகமாகி விட்டது” என்று அந்த வீடியோ உடன் ரோகித் சர்மா பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், “அவர் வீடியோ எடுத்தபோது, நான் கவிதை படித்து கொண்டிருந்தேன். நான் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்து கொண்டிருந்தேன். அந்தக் கவிதையை நான் இன்னும் கூட சரியாக சொல்லி பழகி இருக்கலாம்” என ஷிகர் தவான் அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ளார்.