TAMIL
தந்தையைப் போலவே மகனும் சாதனை! பாராட்டு மழையில் ராகுல் டிராவிட்ன் மகன்
ராகுல் டிராவிட்டின் மகன் 14வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இரண்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ராகுல் டிராவிட்-ன் மகன் சமித், கர்நாடாகாவில் நடந்த 14 வயதுக்கு உட்பட்ட மாநில அளவிலாக கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார்.
துணைதலைவர் லெவன் அணியின் கேப்டனான இருக்கும் சமித், தார்வாட் மண்டலுக்கு எதிரான ஆட்டத்தில் 250 பந்துகளில் 201 ஓட்டங்கள் எடுத்து குவித்தார்.
இந்தில் 22 பவுண்டரிகளும் அடங்கும்.
ஆல்ரவுண்டரான சமித் 2வது இன்னிங்ஸில் 94ஓட்டங்கள் குவித்து பந்து வீச்சில் 26ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பறியுள்ளார்.
இருப்பினும் தார்வாட் அணிக்கு எதிரான துணைத்தலைவர் லெவக் அணி மோதிய போட்டி டிராவில் முடிவடைந்தது.
சிறுவயத்திலிருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமாக இருந்த சமித்துக்கு தொடக்கத்தில் திராவிட் பயிற்சி அளித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் 12வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் சமித் மூன்று அரை சதங்கள் அடித்துள்ளார். இவை அனைத்தும் வெற்றியாக அமைந்துள்ளது.
இவர் வருங்காலத்தில் தந்தையை போல சிறந்த கிரிக்கெட் வீரராக இருப்பார் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.