TAMIL
டோனி பேட்டிங்கை முதல் முறை பார்த்தபோதே திகைத்து விட்டேன்- கிரேக் சேப்பல்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.
பல சர்வதேச போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. இதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கொரோனா பிரச்சினை ஓய்ந்ததும் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் கூட போட்டியை நடந்த கிரிக்கெட் வாரியங்கள் தயாராகி வருகின்றன.
இந்தநிலையில், சமீபகாலமாக டோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் முகநூலில் நேரலை மூலம் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொகுப்பு நிகழ்ச்சி ஒன்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான கிரேக் சேப்பலிடம் டோனி குறித்து கேட்கப்பட்டது.
அப்போது கூறிய அவர், டோனியின் பேட்டிங்கை முதல்முறை கண்ட போதே திகைத்து விட்டேன்.
அத்துடன் அப்போதைய கால கட்டத்தில் இந்திய அணியிக்கு ஒரு திறமையான பேட்ஸ்மேன் கிடைத்துவிட்டதாக பெருமை அடைந்தேன். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு வந்துவிட்டது.
அவர் நான் கண்டவரை இந்திய அணியில் பவர்புல் பேட்ஸ்மேன் டோனி தான் என்று தெரிவித்தார்.