
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 12 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 17 ரன்னிலும் வெளியேறினர்.
மேக்ஸ்வெல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது வீரராக களம் இறங்கிய ராஜத் படிதார் நம்பிக்கையுடன் விளையாடினார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடினார். படிதார் 22 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னில் வெளியேறினார்.

ஏபி டி வில்லியர்ஸ் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன்கள் விளாச ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்துள்ளது. மேக்ஸ்வெல்- படிதார் ஜோடி 30 ரன்களும், படிதார்- ஏபிடி வில்லியர்ஸ் ஜோடி 54 ரன்களும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா, ரபடா, அவேஷ் கான், அமித் மிஷ்ரா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.