
டி காக் 1 ரன்னில் வெளியேற 2-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் 6.6 ஓவரில் 67 ரன்காக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ரோகித் சர்மா 30 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் அமித் மிஷ்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 8.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது.

இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்துள்ளது. டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். அவேஷ் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.