ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சென்னை அணி வீரர்கள் மும்பையில் தங்கியுள்ளனர். சில வீரர்கள் அணியுடன் இணைந்து வருகிறார்கள். சிலர் தங்களை பயணம் தொடர்பாக தனிமைப்படுத்தியுள்ளனர். அதன்பின் பயோ-செக்யூர் வளையத்திற்குள் செல்வார்கள்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டாப் (content team) ஒருவருக்கு இன்று கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதனால் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாப்கள் அவர் அருகில் செல்லவில்லை என்பதால், சென்ன சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி அணியைச் சேர்ந்த அக்சார் பட்டேலுக்கும், வான்கடே மைதான ஸ்டாப்கள் 8 பேருக்கும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து குணமடைந்துள்ளார்.