TAMIL
சிறந்த சாதனையாளர்களுக்கான டைம் பத்திரிகையின் 100 பேர் பட்டியலில் இடம் பெற்ற டூட்டி சந்த்
டைம் பத்திரிகையின் 100 பேர் பட்டியலில் வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், சுகாதாரம், அறிவியல், செயல்பாடுகள் போன்றவற்றில் எதிர்காலத்தை வடிவமைக்கும் 100 பெரிய நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. இதில் இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் பெயரும் இடம் பெற்று உள்ளது.
இது குறித்து டூட்டி சந்த் கூறியதாவது:-
இந்த அங்கீகாரத்தை டைம் பத்திரிகையிலிருந்து பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாலின சமத்துவத்தை நான் நம்புகிறேன். விளையாட்டு மற்றும் பெரிய சமூகத்தில் இளம் பெண்கள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.
தன்னுடைய சாதனை மற்றும் சோதனை காலங்களில் தன்னுடன் இருந்த தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் தன்னுடைய ஆலோசகர் அச்சுயுதா சமந்தாவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீ, 200 மீ பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களை டூட்டி சந்த் பெற்றுள்ளார். மேலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாப்போலியில் நடந்த யுனிவர்சியேடில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் 1980ல் பங்கேற்ற பி.டி. உஷாவிற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து கடந்த 2016ல் டூட்டி சந்த் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமைக்கு காரணமானார்.