TAMIL
கோஹ்லியின் மிரட்டலான ரன் அவுட்… தலையில் அடித்து கொண்டு வெளியேறிய நியூசிலாந்து வீரர் வீடியோ
நியூசிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் கோஹ்லி செய்த துல்லியமான ரன் அவுட் இந்த ஆண்டின் மிகச் சிறந்த ரன் அவுட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா அணி 165 ஓட்டங்கள் எடுத்தது.
166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து 165 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், ஆட்டம் டிராவில் முடிந்தது.
அதன் பின் சூப்பர் ஓவரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்று முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இப்போட்டியில் கோஹ்லி ரன் அவுட் செய்த விதம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.
ஆட்டத்தின் 12-வது ஓவரை சிவம் தும்பே வீச, இதை எதிர் கொண்ட நியூசிலாந்து வீரர் முன்ரோ, ஆப் திசையில் அடித்து விட்டு, இரண்டு ஓட்டங்கள் ஓடினார்.
அப்போது அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த ஷாகுல் தாகூர், ரன் அவுட்டிற்காக த்ரோ செய்ய, அப்போது அங்கு நின்றிருந்த கோஹ்லி அற்புதமாக பந்தை பிடித்து, துல்லியமாக ஸ்டம்பை நோக்கி எறிந்தார்.
பந்தானது சரியாக ஸ்டம்பில் பட்டதால், முன்ரோ ரன் அவுட் ஆகி தலையில் அடித்து பேட்டை வைத்து அடித்து கொண்டு பெளலியன் திரும்பினார்.
இந்த ஆண்டின் அற்புதமான ரன் அவுட்களில் இந்த ரன் அவுட்டும் இருக்கும் என்று வர்ணனையாளர்கள் அப்போது கூறினர்.
India vs Newzealand moment of the match Virat Kohli runout pic.twitter.com/kbWnubYDuC
— Virat Kohli (@PawanBa24485462) February 1, 2020