TAMIL
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் 300 ஏழைக் குடும்பங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வீரர்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஏழைகளுக்கு உதவுவதற்காக, வங்கதேச முன்னாள் அணித்தலைவர் மஷ்ரஃப் மோர்டாசா 300 குடும்பங்களுக்கு உதவி செய்யும் பொறுப்பை ஏற்க முடிவு செய்துள்ளார்.
உலகெங்கிலும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மோர்டாசா, வங்கதேசத்தில் அவர் பிறந்த ஊர், நரைல் மற்றும் லோஹாகரா உபசிலாவில் பகுதிகளில் உள்ள 300 குடும்பங்களின் பொறுப்பை ஏற்க முடிவு செய்துள்ளார்.
மோர்டாசா தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவரது பிரதிநிதிகள் சிலர் இதை கவனித்துக்கொள்கிறார்கள்.
அடுத்த இரண்டு நாட்களுக்குள் உள்ளூர் மக்களுக்கு உதவ நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்கிடையில், பட்டியலை உருவாக்கும் பணி முடிந்தது. வீடு வீடாக பொருட்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஐந்து கிலோ அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் சோப்பு வழங்குகிறோம் என்று மோர்டாசாவின் உதவியாளர் ஜமீல் அகமது கூறினார்.
முன்னாள் கேப்டன் முன்னதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களின் நன்கொடை இயக்கத்திற்கு பங்களித்திருந்தார்,
மேலும், ஏழைகளுக்கு உதவ வங்கதேச வீரர்கள் தங்கள் சம்பளத்தில் பாதியை நன்கொடை அளித்தனர், வங்கதேச வீரர்களின் நன்கொடை இயக்கத்திற்கும் மோர்டாசா நிதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.