TAMIL

கொரோனா தடுப்பு பணிகள்; ரோகித் சர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி

சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் ஏறத்தாழ 38 ஆயிரம் உயிர் பலியை கொரோனா வைரஸ் வாங்கியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகிறது.


தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,251 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 102 பேர் குணமாகியுள்ள நிலையில், 32 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காகப் பொதுமக்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். ரூ. 45 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும் ரூ. 25 லட்சத்தை மராட்டிய முதல்வர் நிவாரண நிதிக்கும் ஸோமாட்டோ ஃபீடிங் இந்தியா நிறுவனம் மற்றும் தெரு நாய்களின் நலனுக்காகத் தலா ரூ. 5 லட்சத்தையும் வழங்கியுள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker