CRICKETLATEST UPDATESNEWSTAMIL
கால் விரல்கள் முறிந்த நிலையிலும், 21 ஓவர்கள் வீசிய நியூசிலாந்து பவுலர் நீல் வாக்னர்

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வீசிய யார்க்கர் பந்து நீல் வாக்னரில் வலது கால் பாதத்தை பலமாக தாக்கியது. இதில் அவரது இரண்டு விரல்கள் முறிந்தன.
என்றாலும் வலி நிவாரணம் (Pain Killer) ஊசியை போட்டுக்கொண்டு முதல் இன்னிங்சில் 21 ஓவர்கள் வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சிலும் 28 ஓவர்கள் வீசிய 2 விக்கெட் கைப்பற்றினார். விரல்கள் முறிந்த நிலையிலும், வலி நிவாரணம் ஊசியை போட்டுக்கொண்டு அணியின் வெற்றிக்காக அஞ்சாமல் பந்து வீசிய நீல் வாக்னரை பாகிஸ்தான் அணி வீரர்கள் பாராட்டியுள்ளனர்.
ஆனால் நீல் வாக்னர் காயம் காரணமாக 2-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.