
மேற்கிந்திய தீவு அணியின் இளம் வீரரான பாபியன் அலனை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த
நிலையில், அவர் தன் தந்தைக்கு அளித்த பரிசின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள, ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மேற்கிந்திய தீவு அணியின் இளம் வீரரான பாபியன்
அலனை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவருடைய ஆரம்ப விலையான 50 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் பாபியன் அலன் வீரர்களுக்கான பட்டியலில் இருந்தார்.
ஆனால் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை, இருப்பினும் இவர் Caribbean Premier League தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்டிரைக் ரேட் 177.23 வைத்திருக்கிறார்.
அதே போன்று CPL தொடரிலும் அசத்தியதால், அவர் மீது நம்பிக்கை வைத்து, சன் ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில், அவர் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய தந்தைக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசாக கொடுத்துள்ளார்.
அதற்கான கார் சாவியை அவரிடம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் நீங்கள் இப்போது வரை என்னிடம் அன்பாகவும், ஆதரவாகவும் இருக்கிறீர்கள், ல வ் யூ அப்பா என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்து இரண்டு தினங்களுக்கு பின் பாபியன் அலன் தன்னுடைய தந்தைக்கு இந்த பரிசை வழங்கியுள்ளார்.