ஐபிஎல் தொடரில் அதிக கேட்சுகளை பிடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை சென்னை அணியின் தலைவர் டோனி பெற்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
இப்போட்டியில் பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியில், பஞ்சாப் அணியின் தலைவர் கே.எல்.ராகுலுக்கு கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தபோது ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்சுகளைப் பிடித்த 2-வது விக்கெட் கீப்பர் எனும் மைல்கல்லை டோனி எட்டினார்.
ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை, இதுவரை டோனி 195 போட்டிகளில் 188 இன்னிங்ஸ்களில் 139 டிஸ்மிஸ்களை செய்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இதில் 100-வது கேட்ச்சை நேற்று பிடித்தார். இதைத தவிர 39 ஸ்டெம்பிங்குகளைச் செய்துள்ளார்.
ஆனால், கேட்ச் பிடித்தவகையில், முதலிடத்தில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.
ஒட்டுமொத்த டிஸ்மிஸல்களைப் பொறுத்தவரை 2-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் இருந்தாலும், கேட்ச் பிடித்த வகையில் அவர் முதலிடத்தில் இருக்கிறார்.
இதுவரை தினேஷ் கார்த்திக் 186 ஐபிஎல் போட்டிகளில் 170 இன்னிங்கஸ்களில் 133 டிஸ்மிஸல்களைச் செய்துள்ளார். இதில் 103 கேட்ச்சுகள், 30 ஸ்டெம்பிங்குகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.