TAMIL
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? பெங்களூருவுடன் இன்று மோதல்
14 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி, 3 டிரா, 5 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்றுள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
பெங்களூரு அணி 15 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி என்று 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.
கடந்த 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்துள்ள சென்னை அணி உள்ளூரில் ஆடும் கடைசி லீக் போட்டி இதுவாகும்.
எனவே தனது உள்ளூர் சீசனை வெற்றியுடன் முடிக்க சென்னை அணி தீவிர முனைப்பு காட்டும்.
ஆனால் பெங்களூரு அணியும் நல்ல பார்மில் இருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
முன்னதாக நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி ராய் கிருஷ்ணாவின் ‘ஹாட்ரிக்’ கோல் உதவியுடன் 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தியது.
10-வது வெற்றியை சுவைத்த கொல்கத்தா அணி அரைஇறுதியை உறுதிசெய்துள்ளது.