TAMIL

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தியது பெங்களூரு

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிக்கு திரும்பியதால் 2 வார கால ஓய்வுக்கு பிறகு நேற்று தொடங்கிய இந்த தொடரில், பெங்களூருவில் அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ்சை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது. பெங்களூரு கேப்டன் சுனில் சேத்ரி 55-வது நிமிடத்தில் தலையால் முட்டி அற்புதமாக கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாக மாறியது. கடைசி வரை கேரள வீரர்கள் இலக்கை நோக்கி துல்லியமாக ஒரு ஷாட் கூட உதைக்கவில்லை.



5-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 2-வது வெற்றி (மற்ற 3 ஆட்டம் டிரா) ஆகும். கேரளாவுக்கு விழுந்த 3-வது அடியாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் ஒடிசா எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker