TAMIL

உலகக்கோப்பையை வெல்வதே எனது விருப்பம் – ரோகித் சர்மா

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் காணொலிக் காட்சி மூலம் உரையாடி வருகின்றனர். இந்நிலையில்,மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஒவ்வொரு முறை களமிறங்கும்போதும் வெற்றி பெற வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால், உலகக் கோப்பை எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்தது.

எனக்கு உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு.

முன்னதாக ரோகித் சர்மா இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்குடன் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். அப்போது அவர் உலகக் கோப்பை பற்றி பேசுகையில்,

3 உலகக் கோப்பை தொடர்கள் வரவுள்ளது. இந்த மூன்றில், குறைந்தபட்சம் இரண்டு உலகக் கோப்பைகளையாவது வெல்ல வேண்டும். அதுதான் என் இலக்கு என்றார்.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது.

அதன்பிறகு, 2023-இல் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker