COVID - 19
இலங்கையில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா! மினுவங்கொடையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது.
ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்களிடம் நடாத்திய பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது மேலும் ஐந்து பேருக்கு நோய்த்தொற்று பரவியிருந்தமை உறுதியாகியுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 3483 ஆக உயர்வடைந்துள்ளது.
திவுலப்பிட்டிய பகுதியில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் ஒருவருக்கு நோய்த்தொற்று பரவியதனைத் தொடர்ந்து, அவருடைய சக பணியாளர்களும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.