TAMIL
இலங்கை கிரிக்கெட் தொடர்! பலம் வாய்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதில் முதலில் ஒருநாள் தொடரில் நடக்கவுள்ள நிலையில் முதல் போட்டி செப்டம்பர் 27ஆம் திகதி கராச்சியில் நடக்கவுள்ளது.இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஷ்ர்பரஸ் அகமது அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷ்ர்பரஸ் அகமது, பாபர் அசாம், ஷதாப் கான், அப்டி அலி, ஆசிப் அலி, பகர் ஜமான், உஷ்மன் சின்வாரி, ஹரிஸ் ஷோஹைல், முகமது ஹஸ்னைன், இப்திகர் அகமது, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், முகமது அமீர், முகமது நவாஸ், வஹாப் ரியாஸ், முகமது ரிஸ்வான்.