CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இந்தியா பெருமை வாய்ந்த கிரிக்கெட் நாடு: அடிலெய்டு போன்று நடக்க விடமாட்டார்கள்- ஆஸி. கேப்டன்

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் ஆக மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா அணியில் மாற்றும் ஏதும் இல்லை.

பொறுப்பு கேப்டன் ரஹானே ஐந்து பேட்ஸ்மேன், ஐந்து பந்து வீச்சாளர்களுடன் தைரியமான களம் இறங்குகிறார். அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டாலும், அதைப்பற்றி கவலைப்படவில்லை. இந்திய அணி வீரர்கள் பாக்சிங் டே டெஸ்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அதேவேளையில் 36 ரன்னில் சுருண்டு படுமோசமான நிலையை எட்டிய இந்திய அணி சற்று மனதளவில் நிலைகுலைந்து இருக்கும். இதை சரியாக பயன்படுத்தி இந்திய வீரர்கள் சுதாரிப்பதற்குள் மற்றொரு அடியை கொடுத்துவிட வேண்டும் என ஆஸ்திரேலியா துடிக்கிறது.

பாக்சிங் டே டெஸ்ட் குறித்து ரஹானே கூறுகையில் நாங்கள் எங்கள் அணி மீது கவனம் செலுத்துவோம் என்றார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் இந்திய அணிக்கு அடிலெய்டு டெஸ்ட் போன்று நடக்காது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாக்சிங் டே டெஸ்ட் குறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘இந்தியா பெருமை வாய்ந்த கிரிக்கெட் நாடு என்பது எங்களுக்குத் தெரியும். ஏராளமான அபாயகரமான வீரர்களுடன் மிகச்சிறந்த திறமைவாய்ந்த டெஸ்ட் அணி.

ஆஷஸ் தொடர்-ஐ பார்த்தீர்கள் என்றால் இங்கிலாந்து 1-2 என பின்தங்கியிருந்தது. அதன்பின் கடைசி டெஸ்டில் அபாரமான விளையாடி வெற்றி பெற்றதுடன் தொடரை சமன் செய்ததது. அந்த தருணத்தை நினைவில் வைத்து நாங்கள் சரியாக செல்வோம்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் பற்றி எங்களுக்குத் தெரியும். அவர்கள் அபாயகரமான வீரர்கள். அவர்கள் போட்டியை பாசிட்டிவாக எடுத்துக் செல்லக்கூடியவர்கள்.

அவர்களுக்கு நாங்கள் இன்ச் கணக்கில் இடம் கொடுத்தால், அவர் அதை மைல் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஆகவே, அடிலெய்டில் எப்படி செயல்பட்டோமோ, அதேபோல் நாளைய போட்டியில் களம் இறங்குவோம். ஐந்து நாள் போட்டிக்கு ஏற்றபடி தயாராக செல்வோம்.

முதல் போட்டியில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். முதல் இரண்டு நாட்கள் முடிவில், நாங்கள் மிகவும் தீவிரமான ஆட்டத்தில் இருந்தோம். அந்த அணுகுமுறையை அடுத்த போட்டிக்கும் எடுத்துச் செல்வோம்’’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker