CRICKETLATEST UPDATESNEWS
இந்திய அணியின் தகுதி சுற்று அடுத்த ஆண்டு நடக்கும் – ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு
உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தாரிலும், ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2023-ம் ஆண்டு சீனாவிலும் நடைபெறுகிறது. இதற்கான தகுதி சுற்றில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் இந்த ஆண்டில் நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால் தகுதி சுற்று தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட இந்திய அணிக்குரிய தகுதி சுற்று போட்டிகள் அடுத்த ஆண்டு (2021) மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் போட்டிகளுக்குரிய கமிட்டி அறிவித்துள்ளது. உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி இழந்து விட்ட போதிலும் இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.