CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆஸ்திரேலியா – இந்தியா டே-நைட் டெஸ்ட் போட்டியை காண 27 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி
ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.
முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடரும், அதன்பின் டி20 கிரிக்கெட் தொடரும் நடைபெறுகிறது. கடைசியாக டிசம்பர் 17-ந்தேதி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்த போட்டியை காண 50 சதவீதம், அதாவது 27 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளும் தலா 27 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது சூழ்நிலைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.