TAMIL
அடுத்த வெற்றிக்கு தயாராகும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய சீருடை! வைரலாகும் புகைப்படங்கள்
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் டி20 போட்டிகளில் பங்கேற்கும் போது அணியும் புதிய சீருடையின் புகைப்படங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுபயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகள் மோதிய ஒரு நாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இலங்கை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இரண்டாவது போட்டி வெள்ளிக்கிழமை நடக்கவுள்ளது. இந்நிலையில் டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு புதிய ஜெர்சி சீருடை வழங்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை இலங்கை கிரிக்கெட் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் தசுன் ஷனகா, திசாரா பெரேரா, மலிங்கா, மேத்யூஸ் ஆகிய நான்கு இலங்கை வீரர்களும் புதிய சீருடையில் ஜொலிக்கிறார்கள்.