CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? – தலைமை செயல் அதிகாரி தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அளித்த ஒரு பேட்டியில், ‘2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டோனியே வழிநடத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன். சென்னை அணிக்காக அவர் 3 முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார்.
முதல்முறையாக இந்த சீசனில் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஆனாலும் நாங்கள் செய்த சாதனையை வேறு எந்த அணியும் செய்ததில்லை. ஒரு மோசமான ஆண்டுக்காக எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. இந்த ஆண்டில் நாங்கள் எங்களது திறமைக்கு தகுந்தபடி விளையாடவில்லை. வெற்றி பெற்றிருக்க வேண்டிய சில ஆட்டங்களில் தோற்று விட்டோம். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோரின் விலகல் அணியின் சரிசம கலவையை பாதித்துவிட்டது’ என்றார்.