LEAGUESNPLTAMIL

NPL தொடரின் 2 ஆவது சீசன் கோலாகலமாக நேற்றய தினம் TILKO CITY ஹோட்டல் இல் ஆரம்பம்

14 அணிகள் வடமாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிறப்பான மென்பந்தாட்ட வீரர்களை தமது அணிக்கு தக்க வைக்க போட்டி போட்டன ஒரு அணிக்கு தலா 16 வீரர்கள் வீதம் மொத்தமாக 224 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

NPL தொடரின் 2 ஆவது சீசன் கோலாகலமாக நேற்றய தினம் TILKO CITY HOTEL இல் ஆரம்பிக்கப்ட்டது. இதன் முதலாவது பகுதியான வீரர்கள் ஏலம் பிற்பகல் 2 மணியளவில் கிருபா லேணர்ஸ் உரிமையாளர் திரு. கிருபாகரன் அவர்களினால் உத்தியோகபூர்வமகா ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்தொடரில் 14 அணிகள் வடமாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிறப்பான மென்பந்தாட்ட வீரர்களை தமது அணிக்கு தக்க வைக்க போட்டி போட்டன ஒரு அணிக்கு தலா 16 வீரர்கள் வீதம் மொத்தமாக 224 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு அணியும் தமக்கென ஒரு வீரரை ஏலத்திற்கு முன்னதாகவே தக்க வைக்க அனுமதிக்கப்பட்டனர். அவ் வீரர்கள் விபரம் கீழே தரப்படுள்ளது.

  1. Chava Spartons – Kabishanth
  2. Ariyalai Killadi 100 – Ajay
  3. North Superiors – Saranraj
  4. Mannar Stars – Vithu
  5. Mannar AA Superkings –
  6. Jaffna Royals – Ajanth
  7. Jaffna King Cobras – Kanistan
  8. Valvai Rhinos – Jony
  9. Vada Strickers – Senthiran
  10. Uthayatharagai Top Eleven – Sathees
  11. Yarl Arrows – Akilraj
  12. No name Cricket club –
  13. Inuvil united stars – Mohanraj
  14. Urelu Royals – sujen

ஒவ்வொரு அணியும் தலா 100 புள்ளிகளின் வழங்கப்பட்டு அதில் தக்கவைத்த வீரருக்காக 25 புள்ளிகள் கழிக்கப்பட்டு மிகுதியான 75 புள்ளிகளுடன் 15 வீரர்களிற்கான ஏலம் இடம்பெற்றது. இதில் அதிகூடிய புள்ளிகளுடன் ஏலம் எடுக்கப்பட்டவர்களின் விபரம் கீழே :

  1. Jeevithan – 36
  2. Tharugash – 31
  3. Anoshan – 30
  4. Sarianthan – 26
  5. Rajeepan – 26

இப் போட்டிகள் யாவும் மட்டுவில் வளர்மதி மைதானத்தில் ROUND ROBIN முறையில் எதிர்வரும் ஆகுஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இச் சுற்றின் இறுதியில் முதல் 4 இடம்பெறும் அணிகள் PLAY OFF இற்கு தெரிவு செய்யப்பட்டு இறுதி போட்டி இடம் பெரும் இப் போட்டிகள் யாவும் கடந்த சீசன் இனை விட இம்முறை மேலும் விமர்சையாக இடம்பெறும் என போட்டி ஏற்படடாளர்கள் தெரிவித்து உள்ளனர் !

குறிப்பாக இம்முறை அனைத்து போட்டிகளும் நேரலையாக NPL
தொடரின் FACEBOOK Page மற்றும் வடக்கின் முதற்தர விளையாட்டு IESPN ஊடகம் ஊடாகவும் ஒளிபரப்பப்படும். இச் சுற்றுத்தொடரின் ஆரம்பநிகழ்வுகள் மற்றும் PLAY OFF கற்று CAPITAL TV இல் நேரலையாக ஒலிபரப்பப்படும்.



Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker