TAMIL

IND v WI: ‘கிங்’ கோலி அதிரடி திட்டம்… முக்கியமான மாற்றத்துடன் களமிறங்குகிறதா இந்திய அணி!

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் முக்கியமான மாற்றத்துடன் களமிறங்க இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி நாளை மும்பையில் நடக்கிறது.

ஏற்கனவே முடிந்த முதலிரண்டு டி-20 போட்டியில் இந்தியா 1 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்று சமனில் உள்ளது. கடைசி போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



தகுதியுள்ளது

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரையில் சொதப்பலான அணியாக கருதப்பட்டாலும், இந்திய பவுலர்களை பதம்பார்க்கும் திறமை கொண்ட உள்ளது.

அதேநேரம் இந்திய அணி வீரர்கள் டி-20 கிரிக்கெட்டை ஒருநாள் போட்டிகளைப்போல விளையாடி வருகின்றனர். எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் சேஸ் செய்யும் இந்திய அணி, இலக்கை நிர்ணயிப்பதில் கோட்டைவிடுகிறது.

மாற்றம் தேவை

இதனால் மும்பையில் நடக்கவுள்ள கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி சரியான பேட்டிங், பவுலிங் என சமநிலையான அணியுடன் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி வழக்கமான மூன்றாவது இடத்துக்கு பதிலாக நான்காவது இடத்தில் களமிறங்கினார்.

‘தல’ தோனின்னா சும்மாவா… அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ‘கிங்’ கோலியின் பதிவு!



துபே ஆறுதல்

இது மூன்றாவது இடத்தில் களமிறங்கிய துபேவுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் கோலிக்கு பாதகமாக அமைந்தது. இதனால் கோலி பின்னால் களமிறங்குவதற்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்கலாம்.

ஏன்னென்றால் தவனுக்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்கும் ராகுல் எந்த இடத்தில் களமிறங்கினாலும் போட்டியின் தன்மைக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும் வீரர். அதேநேரம் கோலிக்கு ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக களமிறங்கிய அனுபவம் உள்ளதால் இந்திய அணிக்கு இந்த மாற்றம் கைகொடுக்கலாம்.

இரட்டை சுழல்

அதேபோல சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் ரன்களை வாரி வழங்குவதோடு, பீல்டிங்கிலும் கேட்ச்களை கோட்டைவிடுகிறார். இவருக்குபதிலாக குல்தீப்புக்கு வாய்ப்பு வழங்கலாம்.

மேலும் நீண்ட இடைவேளைக்கு பின் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகம்மது ஷமிக்கு சான்ஸ் கொடுப்பது பற்றி கோலி சிந்தித்தால் நல்லது.




இன்னும் டைம் இருக்கு

இதற்கிடையில் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் நேரம் உள்ளது என்றும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெல்வதே முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில், “ஒவ்வொரு முறையும் இதை சொல்லிக் கொண்டே இருக்க முடியாது. டி-20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை தயார் செய்து வருகிறோம்.

உலகக்கோப்பைக்கு இன்னும் நாட்கள் உள்ளது. தற்போதைக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெல்வதே முதல் இலக்கு.” என்றார்.

எதிர்பார்க்கப்படும் லெவன் அணி

ஒருவேளை இந்த மாற்றங்களை கோலி ஆலோசனை செய்யும்பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி -20 போட்டியில் களமிறங்கும் எதிர்பார்க்கப்படும் இந்திய லெவன் அணி ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சிவம் துபே, ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல், ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் , தீபக் சஹார், முகம்மது ஷமி, சஹால்.



Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker