![](https://iespnsports.com/wp-content/uploads/2021/04/image_2021-04-10_124926.png)
சீசன் தொடங்கும்போது அந்த அணி சிறப்பாக விளையாடாது. சீசன் செல்ல செல்ல விஸ்வரூபம் எடுக்கும். வாழ்வா? சாவா? என வந்தால் நெருக்கடியை சமாளித்து வெற்றி வாகை சூடும்.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 2013-ல் இருந்து முதல் போட்டியை வென்றது கிடையாது. நேற்று ஆர்சிபி-க்கு எதிராக வெற்றி பெற்று அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் தோல்வியடைந்து மோசமான சாதனையை தொடர்கிறது.
![ஆர்சிபி அணி ஆர்சிபி அணி](https://img.maalaimalar.com/InlineImage/202104101104002166_1_RCB._L_styvpf.jpg)
2013-ல் ஆர்சிபி, 2014-ல் கொல்கத்தா, 2015-ல் கொல்கத்தா, 2016-ல் ஆர்பிஎஸ், 2017-ல் ஆர்பிஎஸ், 2018-ல் சிஎஸ்கே, 2019-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ், 2020-ல் சிஎஸ்கே, தற்போது ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.