TAMIL
கடைசி நொடியில் மனம் மாறிய நியூசிலாந்து வீரர்.. கோபத்தில் நடுவரிடம் கொந்தளித்த கோஹ்லி: சிக்கிய காட்சி
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி நடுவரிடம் கோபப்பட்டு கத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என இழந்தது.
போட்டியின் போது நியூசிலாந்து துடுப்பாட்டகாரர் நேரம் முடிந்த பிறகு டிஆர்எஸ் கேட்டு, அது மறுஆய்வு அனுமதி வழங்கப்பட்டதால் கோபமடைந்த கோஹ்லி களநடுவரிடம் கொந்தளித்தார்.
நியூசிலாந்து இன்னிங்ஸின் போது 16வது ஓவரை இந்திய வீரர் சஹால் வீசினார். 5வது பந்தில் துடுப்பாடிய நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸில் பேடில் பட்டது. சஹால் உட்பட இந்திய வீரர்கள் முறையிட நடுவர் அவுட் என காட்டினார்.
இதனையடுத்து, டிஆர்எஸ் நேரம் வழங்கப்பட்டது. கடைசி நொடி முடிந்த பிறகு நிக்கோல்ஸ் மறுஆய்வுக்கு அழைப்பு விடுக்க, அதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு 3வது நடுவர் விக்கெட்டை ஆய்வு செய்தார்.
இதனால், கோபமடைந்த கோஹ்லி களநடுவர் புரூஸ் ஆக்ஸன்போர்ட்-யிடம் கொந்தளித்தார். இறுதியில் வீடியோவை ஆய்வு செய்த 3வது நடுவர் அவுட் என அறிவித்தார்.
நிக்கோல்ஸ் 41 ஓட்டங்களில் நடையை கட்டினார். இந்திய அணி முதல் விக்கெட்டை சாய்த்தது.