TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ; இந்தியா முதலில் பந்து வீச்சு
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது.
இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார்.
இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது.
இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால் இந்திய அணியினர் பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் தயாராகியுள்ளனர்.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு
நியூசிலாந்து ; நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளன்டெல், ராஸ் டெய்லர், டாம் லாதம் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், , டிம் சவுதி, ஹாமிஷ் பென்னட், மார்க் சப்மன், கைல் ஜாமிசன்
இந்தியா ; பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரித் பும்ரா,