TAMIL
இந்தியா-நியூசிலாந்து இடையேயான 3வது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி பந்துவீச்சு
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
ஆக்லாந்தில் நடந்த முதல் 2 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.