TAMIL
பாகிஸ்தான்-வங்காளதேசம் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து
பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
போட்டி தொடங்கும் முன்பே மழை குறுக்கிட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் ‘டாஸ்’ போடப்படாமலேயே இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
முதல் 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருந்ததால் அந்த அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.