TAMIL
கைக்கு பழமாக வந்த கேட்ச்.. தவறவிட்டு அசிங்கத்தில் முகத்தை மூடிய கோஹ்லி.. கோபத்தில் சிரித்த பும்ரா: வைரல் வீடியோ

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி மிகவும் சுலபமாக கேட்ச்சை தவறவிட்டது ரசிகர்களிடையே அதிப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்லாந்தில் நடந்த 2வது டி-20 போட்யில் இந்திய அணி 7 விக்கெட் வித்திரயாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றிப்றெ்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற வெற்றி கணக்கில் இந்திய முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டி-20 போட்டியிலும் கலக்கிய இந்திய வீரர் கே.எல்.ராகுல் 2-வது டி-20 போட்டியிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்கள் குவித்தார்.
ஆனால், 2வது டி-20 போட்டி இந்திய அணித்தலைவர் கோஹ்லிக்கு சிறப்பாக அமையவில்லை.
நியூசிலாந்து இன்னிங்ஸின் போது சுலபமான கேட்ச்சை தவிறவிட்ட கோஹ்லி, துடுப்பாட்டத்தில் 11 ஓட்டங்களில் நடையை கட்டினார்.
நியூசிலாந்து இன்னிங்ஸின் போது 18வது ஓவரில் இந்திய நட்சத்திர வீரர் பும்ரா பந்து வீச, டெய்லர் பந்தை பறக்கவிட்டார்.
சுலபமாக வந்த பந்தை பிடிக்க ஆயுத்தமான கோஹ்லி, இறுதியில் கேட்ச்சை தவறவிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகினார்.
கோஹ்லி கேட்ச்சை தவறவிட்டதை கண்ட மிகுந்த ஏமாற்றமடைந்த பும்ரா, கோபத்திலும் சிரிப்பை வெளிப்படுத்தினார்.
சுலபமான கேட்ச்சை தவறவிட்டு அசிங்கப்பட்ட கோஹ்லி, விரக்தியில் தனது முகத்தை மூடிக்கொண்டார்.